உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இங்கிலாந்து

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:50 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் முன்னணியில் இருந்தன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸி பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இப்போது இந்தியாவிடம் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து தோற்றதை அடுத்து அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாலும் அது ஆஸி அணி இறுதிப் போட்டிக்கு செல்லவே வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்