5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

Mahendran
வியாழன், 7 மார்ச் 2024 (13:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்றுமுன் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராலே மட்டும் 79 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற பேட்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர் 
 
பும்ரா இரண்டு விக்க்ட்டுகளையும் சிராஜ், குல்தீப்  யாதவ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்
 
ஏற்கனவே இந்தியா இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில் இந்த போட்டியையும் வென்று 4-1 என்ற கணக்கில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்