இந்திய அணி கோஹ்லியை நம்பி இருக்கக்கூடாது: கபில்தேவ் வருத்தம்

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (16:45 IST)
இந்திய அணி விராட் கோஹ்லியை நம்பியே இருக்கிறது அப்படி இருக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 
 
டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் டெஸ்ட் தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இதுகுறித்து கூறியதாவது:-
 
விராட் கோஹ்லி ஒருவரை நம்பி அணி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும். கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்கும் போது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. 
 
இந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்