கோஹ்லி தலைமை சரியில்லை; நேரடியாக தாக்கிய கவாஸ்கர்

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (15:14 IST)
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததற்கு கோஹ்லியின் தலைமைதான் காரணம் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 
 
டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் டெஸ்ட் தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தபோது பலரும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி தொடரை இழந்ததற்கு காரணம் கோஹ்லி தலைமைதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் நேரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த தோல்விக்கு கோஹ்லியின் கேப்டன்சியைதான் கேள்வி கேட்க வேண்டும். வீரர்களும் தங்களது பங்களிப்பை அளிக்கவில்லை. இந்தியா ஏழு முழுமையாக பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும். பின்வரிசை வீரர்கள் நன்றாக விளையாடி இருக்கலாம் என்ற கோஹ்லியின் கருத்து தவறானது என்று கூறியுள்ளார்.
 
கோஹ்லியின் கேப்ட்சன்சியை கவாஸ்கர் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்