மீண்டும் சதத்தை தவறவிட்ட டேவிட் வார்னர்: 95 ரன்களில் அவுட்!

வியாழன், 16 டிசம்பர் 2021 (16:38 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 2வது ஆஷஸ் தொடரின் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் டேவிட் வார்னர் 95 ரன்களில் அவுட்டானார். அதனால் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 94 ரன்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்ட நிலையில் இன்றும் அவர் சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சதத்தை தவறவிட்டு சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர் மைதானத்தில் இருந்த சிறுவனுக்கு தனது கிளவுஸை கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை சற்று முன் வரை முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து உள்ளன என்பதும் லாபுசாஞ்சே 94 ரன்கள் அடித்து அடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்