அதை தொடர்ந்து இன்று அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புடைய நபரோடு தொடர்பில் இருந்ததால் பேட் கம்மின்ஸ் இரண்டாவது டெஸ்டில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஹெசில்வுட்டும் போட்டியில் விலகியுள்ளார். இதனால் இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.