ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

Prasanth Karthick

செவ்வாய், 6 மே 2025 (09:23 IST)

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இன்று ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

 

இந்த தொடரில் 11 போட்டிகளில் 7ல் வென்று 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வென்றால் ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு அதிகரிக்கும். ஆரம்பத்தில் சில போட்டிகள் தோல் வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை மட்டுமே குவித்து மேல் எழுந்து வந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

 

குஜராத் டைட்டன்ஸ் இந்த தொடரில் 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது, இரு அணிகளுக்குமே இந்த போட்டி ப்ளே ஆப் செல்ல திருப்புமுனை போட்டியாக இருக்கிறது. குஜராத் அணி கலவையாக வெற்றி தோல்வியை எதிர்கொண்டு வருகிறது. குஜராத் அணி பந்துவீச்சாளர் ரபாடா கடந்த சில போட்டிகளில் விளையாடாதது பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் அவர் மீண்டும் வருவது குஜராத் அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

 

இந்த இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ள நிலையில் இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்