ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்ட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே 43 ரன்களும், பிரேவிஸ் 42 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியின் இரண்டு புதுமுக இளைஞர்கள் மட்டுமே நேற்று ஓரளவு ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 17 ஓவர்களில் 188 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது. 14 வயது வைபவ் சூரியவம்சி 57 ரன்களும், கேப்டன் சஞ்சு ஜாம்சன் 41 ரன்களும் எடுத்தனர்.