டெல்லியை வீழ்த்தியது சென்னை அணி

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (23:15 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் பந்துவீச முடிவு செய்ததால், சென்னை அணி முதலில் களமிறங்கியது.
 
வாட்சன் மற்றும் தோனி ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் அடித்தது. வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்களும், தோனி 22 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி முக்கிய விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது. ஷா, முண்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், ஆர்.ஆர்.பேண்ட் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் டெல்லி அணி 20 ஓவர்களில் 5  விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் சென்னை அணி முதலிடத்தை பிடித்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்