வாட்சன், தோனி அதிரடியில் டெல்லி அணிக்கு 212 ரன்கள் இலக்கு

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (21:44 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது. 
 
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய வாட்சன் சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 40 பந்துகளுக்கு 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரெய்னா வந்த வேகத்தில் வெளியேறினார். இதன்பின்னர் களமிறங்கிய தோனி மற்றும் ராயுடு பந்துகளை சிதறடித்தனர். 
 
20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்