இந்தப் போட்டியில் சதம் அடித்த கிறிஸ் கெய்ல் 129 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார். இதில் 12 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியின் 12 ஆவது சிக்ஸரை கெய்ல் அடித்தப்போது சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியிடம் இருந்து அவர் பறித்துள்ளார்.
ஷாகித் அப்ரிடி 524 சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்ஸர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் கெயில் 444 போட்டிகளில் 477 சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையைத் தகர்த்துள்ளார். இதுவரை கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் 276 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 103 சிக்ஸரும் டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.