6 வது முறையாக ஓய்வை அறிவித்த ஷாகித் அப்ரிடி!

சனி, 2 ஜூன் 2018 (16:03 IST)
பாகிஸ்தான் அணியின் அணியின் முக்கிய வீரரான ஷாகித் அப்ரிடி ஆறாவது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
இதனால், லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர்.
 
ஆனால், இதற்கு முன் பாகிஸ்தான் அணியில் இருந்து பலமுறை ஓய்வு பெறுவதாக அறிவித்தும் மீண்டும், மீண்டும் தனது முடிவை மாற்றி அப்ரிடி போட்டிகளில் விளையாடினார். 
 
இது குறித்து அப்ரிடி பின்வருமாறு பேசினார், சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். அதிகமான வயது, காயத்தால் இனி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இயலாது. 
 
கிரிக்கெட்டின் தாய் என அழைக்கப்படும் லண்டன் நகரில் எனது கடைசி போட்டியை நான் விளையாடுவது எனக்கு பெருமையாக இருக்கிறது என தெரிவித்தார்.  இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2017 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்