44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சீனா திடீர் விலகல்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (09:26 IST)
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சீனா திடீர் விலகல்
சென்னையில் 44வது சர்வதேச ஒலிம்பிக் போட்டி ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையில் 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதாக கூறிய சீனா தற்போது திடீரென விலகியுள்ளது. சீனா இந்த போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 2014, 2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற சீனா அணி தற்போது திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், இந்திய அணிக்கு அதிக பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்