சென்னையில் கடந்த சில நாட்களாக ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் உலகெங்கிலுமிருந்து பல நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின் 3-வது சுற்றில் எஸ்டோனியா வீரர் மிலீஸ் கனெப் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
இந்த நிலையில் அவரை எதிர்த்து விளையாடிய ஜமைக்கா வீரர் ஜேடன் ஷா வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், எதிரணி வீரர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் போட்டியை சமனில் முடிக்க ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து இதுதான் உலகின் மிகச் சிறந்த விளையாட்டு மாண்பு என்று அவரை சக வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.