செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

Prasanth Karthick
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (11:27 IST)

ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 10 சுற்றுகள் முடிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 

 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11ம் தேதி ஹங்கேரியில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன

 

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஓபன் பிரிவில், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர்.

 

மகளிர் பிரிவில் அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

மொத்தம் நடக்கும் 11 சுற்றுகளில் அதிக வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடம் பெறும் நாடு தங்க பதக்கத்தை வெல்லும். இந்நிலையில் இதுவரை நடந்த 10 சுற்று போட்டிகளிலும் இந்தியாவின் ஓபன் அணி, மகளிர் அணி என இரண்டு அணிகளுமே அதிக வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளன.

 

நேற்று நடந்த 10வது சுற்றில் இந்திய அணி அமெரிக்க அணியை எதிர்கொண்ட நிலையில் 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்திய மகளிர் அணி சீனாவுடன் மோதிய நிலையில் 2.5 - 1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

 

தொடர்ந்து இந்திய அணியின் இரு பிரிவுகளுமே தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வரும் நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்