6 பவுலர்களின் ஸ்டைலில் பந்துவீசிய பூம்ரா… வாவ் போடும் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:47 IST)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பூம்ரா வலைப்பயிற்சியின் போது 6 பேரின் ஸ்டைலில் பந்துவீசி அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கும் பூம்ரா தற்போது ஐபிஎல் தொடருக்காக துபாயில் மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் முனாப் படேல், க்ளென் மெக்ராத், மிட்சேல் ஸ்டார்க், கேதார் ஜாதவ், ஷ்ரேயஸ் கோபால் மற்றும் அணில் கும்ப்ளே ஆகியோர் எப்படி பந்து வீசுவார்களோ அப்படியே வீசி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்