லலித் மோடி பெயரில் இயங்கும் பிசிசிஐ... காரணம் என்ன?

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (17:01 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் மற்றும் டிவி முன்னாள் தலைவர் லலித்மோடி பெயரில் இயங்கிவருகிறதாம். இந்நிலையில், சில மணி நேரம் பிசிசிஐ இணையதளம் மற்றும் டிவி முடங்கியுள்ளது. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2010 ஆம் ஆண்டு பிசிசிஐ அமைப்பால் ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 
 
இருப்பினும் அவர் பெயரில்தான் பிசிசிஐ இணைதளமும், டிவியும் செயல்பட்டு வருகிறது. அவர் பணம் செலுத்தாததால் பிசிசிஐ இணையதளம் சில மணி நேரங்கள் முடங்கியது.
 
இதனால் யு-19 போட்டியின் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு எந்த ஒரு தகவல்களும் இணையதளத்தில் வெளியாகவில்லை. பணம் செலுத்தாததால், இணையதளம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாவது, பிசிசிஐ  பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்ட லலித் மோடி பெயரில்தான் இன்னும் பிசிசிஐ இணையதளம் இயங்கி வருகிறது. இணையதளத்தின் புதுப்பிக்கும் காலம் இன்னும் ஓராண்டு இருந்தாலும், பணம் செலுத்தாததால், முடக்கப்பட்டது. 

பின்னர், லலித் மோடியின் அலுவலர்களை தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தபின், பணம் செலுத்தி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்