ஊக்கமருந்து விவகாரம்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு தடை

செவ்வாய், 30 ஜூலை 2019 (20:56 IST)
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவ்வபோது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியதற்காக தடை செய்யப்படும் செய்திகள் அவ்வபோது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஊக்கமருந்து காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது
 
ஊக்க மருத்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் விளையாட தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பிரித்வி ஷா கவனக்குறைவாக தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் இந்த குறைந்தபட்ச நடவடிக்கை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தடையால் பிரித்வி ஷா வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது.
 
பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர் தான் இருமலுக்காக மருத்துவர் பரிந்துரை செய்யப்படாத மருந்தை வாங்கி சாப்பிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதால் அவரது விளக்கத்தை ஏற்ற பிசிசிஐ, முன் தேதியிட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அவரது தடை கடந்த பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதால் அவர் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே தடை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிருத்விஷா, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியிலும் விளையாடி வந்தார். 19 வயதே ஆன இவர் சச்சினை அடுத்து மிக இளவயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்