இந்த போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. கேப்டன் அனிருதா அபாரமாக விளையாடி 98 ரன்கள் எடுத்தார். சூர்யபிரகாஷ் 20 ரன்களும், கார்த்திக் 17 ரன்களும் ஷாஜஹான் 16 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி அணி பந்துவீச்சாளர்களை திண்டுக்கல் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் கதற வைத்தனர். ஹரி நிஷாந்த் 81 ரன்களும், ஜெகதீசன் 78 ரன்களும் எடுத்தனர். ஹரி நிஷாந்த் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்