இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சரான முன்னாள் ஆசிரியர் !

திங்கள், 29 ஜூலை 2019 (17:20 IST)
கேரள மாநிலம் அழிக்கோடு கிராமத்தில் வசித்து வந்தவர் ரவீந்தர், இவர் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவந்தார்.
இதனையடுத்து அவர் கடந்த 2011 ஆன் ஆண்டு  திங்க் & லேர்ன் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.இந்த அனுபவத்தின் மூலம் இணையதளத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவந்தார்.  
 
இதனைத்தொடர்ந்து தானே ஒரு ஸ்டாட் ஆப் நிறுவனத்தை தொடங்கலாம் என்று நினைத்து பைஜூஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தார். இவர் இந்த செயலியை ஆரம்பித்த நோக்கம் எளிதாக மக்களிடம் சென்று சேர்ந்தது. அதனால் இச்செயலியின் மூலம் எல்கேஜி முதல்  12 வகுப்பு வரையுள்ள பாடத்திட்டங்களூக்கு எளிதான செயல்முறை விளக்கம் கொடுத்தார். அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் தேவையான பாடத்திட்டங்கள் குறித்தும் இந்த தளத்தில் வீடியோக்களாகப் பதவிவேற்றினார்.அதனால் மாணவர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு கிடைத்தது. 
 
இந்த நிலையில்  ரவீந்தர் தொடங்கிய பைஜூ’ ஸ் நிறுவனம் தற்போது 6 மில்லியன்,  விலை இந்திய மதிப்பில் 6 மில்லியன் டாலர் அளவிற்கு வளர்ந்துள்ளது. நம் இந்திய மதிப்பில் 413 கோடி ரூபாய்க்கு மேலான வருமானம் ஈட்டும் நிருவனமான உருவெடுத்துள்ளது. வளரும் இளம் தொழிலதிபராக ரவீர்ந்தரி இந்த நிறுவனம் இப்போது நம் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக தேர்வாகியுள்ளது. இதனை கேரள மக்கள் பெருமையுடன் நினைக்கிறரர்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்