டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் திடீர் விலகல்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (13:02 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தோள்பட்டை காயம் காரணமாக டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
 
ஸ்மித் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் ஸ்மித் டி20 போட்டியில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்