இலங்கை விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ராஜபக்சே எதிர்ப்பு

சனி, 7 அக்டோபர் 2017 (11:36 IST)
இலங்கையில் உள்ள மாத்தளை சர்வசேத விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க, ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.


 

 
இலங்கை அரசு, அம்பாந்தோட்டை என்ற பகுதியில் இருக்கும் மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வாகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளது. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
 
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகம் முன்பு நீதிமன்ற தடையை மீறி போராட்டம் நடத்தியுள்ளனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு 4 காவல்துறையினர் காயம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்த போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
 
இந்த விமான நிலையம் சீனாவிடம் கடன் பெற்று ராஜபக்சே ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையத்தை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்