106 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்: அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:11 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று பெர்த் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:
பாகிஸ்தான்: 106/8 20 ஓவர்கள்
இப்டிகார் அகமது: 45
இமாம் உல் ஹக்: 14
முகமது அமிர்: 9
ஹரிஸ் சோஹைல்: 8
இந்த அணியின் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலியா: 109/0 11.5 ஓவர்கள்
வார்னர்: 48
பின்ச்: 52
ஆட்டநாயகன்: அப்பாட்
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது என்பதும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது