வங்கதேச அணிக்கு மரண அடி கொடுத்த ரோஹித் சர்மா! 15 ஓவர்களில் முடிந்த மேட்ச்

வியாழன், 7 நவம்பர் 2019 (22:21 IST)
உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாகவும், தொடர் வெற்றி பெற்று வரும் அணியாகவும் இருந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் வங்கதேச அணி துள்ளி குதித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, அந்த அணிக்கு மரண அடி கொடுத்தார்.
 
வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மார் ருத்ரதாண்டவம் ஆடி, 43 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனையடுத்து தவான் 31 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களும் எடுக்க இந்திய அணி 15.4 ஓவர்களில் 154 என்ற இலக்கை எட்டியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதே ஆத்திரத்தில் இன்று வங்கதேச அணியை புரட்டி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்