அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுக்கள்: அஸ்வின் அபார பந்துவீச்சு!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (12:12 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்துவீசி உள்ளார்
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 365 ரன் குவித்தது. ரிஷப் பண்ட் அபாரமாக சதமடித்தார் என்றும் என்பதும் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை சற்றுமுன் தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வினின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தற்போது இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்துள்ளது என்பது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 145 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் 145 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை சுருட்டிவிட்டால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்