நிறைவு பெற்றது ஆசிய விளையாட்டு போட்டி.. கடைசி நாளில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள்..!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:26 IST)
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் ஹாங்சூ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இன்று அதாவது அக்டோபர் 8ஆம் தேதி இறுதி நாள் என்ற நிலையில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்தியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட நிலையில்  28 தங்கம் உட்பட 107 பதக்கங்களுடன் இந்திய அணி போட்டியை நிறைவு செய்தது.

நேற்று மட்டும் மட்டும் இந்திய அணி 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது. அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியலில் சீனா 382 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் உட்பட 107 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70 என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்