இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 24 ஆம் தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென் ஆப்பிரிக்காவில் மூன்று வகை தொடர் நடைபெறுகிறது.
தற்போது இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையுடனான மோதலில் டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ளது.
ஆனால், தென் ஆப்பிரிக்கா தொடர் இலங்கையுடனான தொடர் போல் எளிதாக இருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்திய அணியின் வெற்றி பயணத்தில் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணி வரும் 27 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து விச்சில் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல் இடம்பிடித்துள்ளனர். அஸ்வின், ஜடேஜாவிற்கு இந்த தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த சில போட்டிகளில் அஸ்வின், ஜடேஜா ஆகிய முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு இருக்கையில், உலகக்கோப்பை போட்டியில் இவர்கள் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் உறுவாகியுள்ளது.