காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 3 இந்திய வீரர்கள் மரணம்
சனி, 23 டிசம்பர் 2017 (19:38 IST)
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவ படை அத்துமீறி தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இதில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 881 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் இந்திய ராணுவத்தினர் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.