473 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா: 12 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:08 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இதனை அடுத்து அந்த அணி டிக்ளேர் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இன்று விளையாடத் தொடங்கிய நிலையில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீது மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர் என்பதும் மலன் மற்றும் ரூட் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணி தற்போது 456 ரன்கள் பின்தங்கி இருப்பதால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் லாபுசாஞ்சே சதமடித்தார் என்பதும் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் 90 ரன்களுக்கு மேல் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்