5 விக்கெட்டுக்களை வீழ்த்திய அர்ஜூன் தெண்டுல்கர்: பவுலராக சாதிப்பாரா சச்சின் மகன்?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (00:59 IST)
உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். ஆனால் அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர், பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.

19 வயதிற்குட்பட்டோர்களுக்கான கூச்பெஹார் டிராபி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பை மற்றும் ரயில்வே அணிகள் சமீபத்தில் மோதின

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அர்ஜூன் தெண்டுல்கர் 6 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 11 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜூன் ஒருசிறந்த பவுலராக உருவாகி வருகிறார். ஏற்கனவே அர்ஜூன், ஒருமுறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதால் இது இவரது இரண்டாவது ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்