உலகக்கோப்பை 2019 – ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (14:21 IST)
உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டன. உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் ஏப்ரல் 23 ஆகும். இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது.

சமீபகாலமாக கிரிக்கெட் உலகில் கலக்கி வரும் ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் ரஷீத்கான், முகமது நபி, ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீரர்களாக முத்திரை பதித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி :-
குலாம் நபி(கேப்டன்), முகமது ஷாசாத்(விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜ்புல்லா ஜத்ரன், ஷமிமுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஜத்ரன், அப்தப் ஆலம், ஹமித் ஹசன்,முஜிப் உர் ரஹ்மான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்