இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக்கோப்பைபோட்டியில்இந்தியஅணியைஉற்சாகப்படுத்துவதற்காக 22 நாடுகளில்இருந்துசுமார் 8 ஆயிரம்பாரத்ஆர்மிரசிகர்கள்இங்கிலாந்துசெல்லவுள்ளனர்.
இங்கிலாந்து அணியை ஆதரிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பார்மி ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கி இங்கிலாந்து அணி சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் போது மைதானத்திற்கு சென்று அவர்களை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தின் பார்மி ஆர்மி போல இந்திய அணியை ஊக்குவிப்பதற்காகவும் பாரத் ஆர்மி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரமாக இந்திய அணிக்கு உத்வேகம் கொடுத்தனர். இந்திய அணியும் தொடரை வென்ற போது அவர்களோடு சேர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
வரும் மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக பாரத் ஆர்மியை சேர்ந்த 8000 கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்ய இருக்கின்றனர். இதற்காக 22 நாடுகளில் உள்ள பாரத் ஆர்மி உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்த பாரத் ஆர்மி அமைப்பு 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது நான்கு ரசிகர்களால் தொடங்கப்பட்டது