காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். மேலும் 89 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில்இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியா இதுவரை 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.