67 பந்துகளில் 200 ரன்கள்: உதயமாகிறார் அடுத்த சச்சின்

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (23:05 IST)
மும்பையை சேர்ந்த 19 வயது ருத்ரா என்ற வீரர் 67 பந்தில் 200 ரன்கள் விளாசி சாதனை செய்துள்ளார். இவர் அடுத்த சச்சின் தெண்டுல்கராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 


மும்பையில் பல்கலைகழங்களுக்கு இடையேயான டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த 19 வயது வீரர் ருத்ரா, 67 பந்தில் 200 ரன்கள் விளாசி சாதித்துள்ளார். இவர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 15 சிக்சர்கள், 21 பவுண்டரிகள் விளாசி இரட்டை சதத்தை எட்டினார்.

இவருடைய ஆட்டத்தின் ஸ்டைலை பார்க்கும்போது சிறுவயது சச்சினை பார்த்தது போல் இருப்பதாகவும் எதிர்காலத்த்ஹில் ருத்ரா இந்திய அணியில் பெரிய சாதனைகளை செய்வார் என்றும் அவருடைய பயிற்சியாளர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்