''தோனி, ஸ்டீவன் பிளமிங் உருவாக்கிய பாதையில் வீரர்கள் ஜாலியாக இருக்கலாம்''- முன்னாள் வீரர்

புதன், 15 மார்ச் 2023 (21:29 IST)
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஸ்டீவன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் தற்போதைய வீரர்கள் ஜாலியாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

ஐபிஎல் போட்டித் தொடரைப் பார்க்க ரசிகர் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.  இந்த நிலையில், சென்னை கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன்,' சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஸ்டீவன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் தற்போதைய வீரர்கள் ஜாலியாக இருக்கலாம். உட்கார்ந்து பேசுகின்றபோதுகூட போட்டி  முடிவுகளைப் பற்றி இருந்ததில்லை என்றும் அணியில் இருந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அன்றைய காலக்கட்டம் அருமையான நேரமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இத்தொடரில் சென்னை அணி கோப்பை வென்று தோனியை வெற்றிக் கேப்டனாக அனுப்பி  வைக்கும் என தெரிகிறது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்