ராம நவமியில் கடைப்பிடிக்கவேண்டிய விரத முறைகள் என்ன...?

Webdunia
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.

ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி #விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், தசரத ராமன் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும்  ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப் படுகின்றன.
 
ராம நவமியில் இப்படிப்பட்ட சிறப்பு நைவேத்தியங்கள் படைத்து இறை பூஜை செய்ய இயலாதவர்கள் வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை  அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.
 
ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது #ஸ்ரீ_ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன் மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.
 
அக்கினி பீஜமாகிய 'ர', ஞானம் தரும் சூரிய பீஜமாகிய 'அ', செல்வத்தை அள்ளித்தரும் சந்திர பீஜமாகிய 'ம' - ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஸ்ரீ ராம நாம மந்திரத்தை தினமும் ஓதுவதால், நம் பாவங்கள் யாவும் நீங்கி, கல்வி, செல்வம், வீரம் ஆகிய யாவும் பெற்றுச் சிறப்படையலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்