படிக்கட்டு அமைப்பதில் உள்ள வாஸ்து முறைகள் என்ன...?

ஒரு வீடு கட்டி முடித்தவுடன் அந்த வீட்டின் வாசல்படியை எப்படி வேண்டுமானாலும் அமைக்க முடியாது. அதற்கும் கண்டிப்பாக வாஸ்து பார்த்து கட்ட வேண்டியது மிக அவசியம்.

சிக்கல்கள் எல்லாம் வீட்டிற்கு வெளியே படிக்கட்டு கட்டும் போதுதான் ஏற்படுகிறது. படிக்கட்டு அமைக்கும் பொழுது அது வட்ட வடிவிலோ, நேர் சென்று திரும்பும்  வகையில் எப்படி வேண்டுமானாலும் எந்த வடிவில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
 
அதேபோல படிக்கட்டை இரும்பு, மரம், காங்க்ரீட் என எந்த பொருள் கொண்டு வேண்டுமானாலும் கட்டலாம். வாஸ்து என்பது படிக்கட்டு எந்த இடத்தில் துவங்கி எங்கு முடிவுற வேண்டும் என்பதில்தான் இருக்கிறது.
 
படிக்கட்டை கட்டும்பொழுது வீட்டின் தென் மூலை அல்லது மேற்கு மூலையிலிருந்து மேலெழும்ப கட்டுவது சிறப்பு. தெற்குப் பகுதியில் இருந்து மேலெழும்புகிறது என்றால் கிழக்கு நோக்கி அமைந்தால் சிறப்பு. அல்லது தெற்கில் இருந்து மேலெழும்பி மேற்கு நோக்கி அமைந்தாலும் சிறப்பு.
 
ஆனால் வடகிழக்கு மூலையில் அமையப்பெற்ற படிக்கட்டு பொருளாதார இழப்பையும் தன்மான இழப்பையும் ஏற்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்