தினமும் காலை சூரிய பகவானை வணங்க வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடல், கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் வாசித்தல் வேண்டும். மேலும் அன்னதானம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை கழுவி விடவேண்டும்.
ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளைச் சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்ட லட்சுமிகளையும் மறக்காமல் துதித்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, தூய்மையான ஆடை உடுத்தி, குலதெய்வத்தை மனதுள் நிறுத்தி, உத்தரவைப் பெற்றுக் கொண்டு விநாயகர் பூஜையை துவங்குங்கள். கணபதி பூஜையை முடித்து விட்டு, இந்த அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டு வர, வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும்.