வைகாசி மாதத்தில் வருகின்ற வருதினி ஏகாதசி வழிபாடு !!

Webdunia
எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களை போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. 

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி 'வருதினி'. வளர்பிறை ஏகாதசி 'மோகினி'. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத்  தரும்.
 
இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
 
வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது.
 
மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர்.
 
முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள்  கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்