மும்மூர்த்திகளின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் !!

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தை சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். 

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப் போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார். 
 
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும் படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, "பெண்ணே நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்" என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும்,  பதிவிர தை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு. 
 
கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, "நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்" எனச்  சொல்லி அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்க ளும் குழந்தைகளானார்கள். 
 
தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி  முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு  கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்