முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய உகந்த அமாவாசை !!

Webdunia
திங்கள், 30 மே 2022 (09:21 IST)
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி.


இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது. அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தான தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும்.

இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம்.

புரோகிதர்களை அழைத்து யாகம், தில் ஹோமம் செய்து வணங்கலாம். முடியாத பட்சத்தில் இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை  ப்ராம்மணர்களுக்கு கொடுக்கலாம்.

இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசை புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.

துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்