ஓம் என்னும் சொல்லை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

Webdunia
ஓம் என்னும் சொல்லை நாம் பல முறை நம்முள் கூறும்போது, மனிதருக்குள் இருக்கும் அசுரத்தன்மை வெளியேறும் ஓம் என்ற சொல்லை உள்ளுணர்வோடு நீண்டு கூறுவது  முக்கியம். 

பழங்காலத்தில் முனிவர்கள்  முதற்கொண்டு அனைத்து வகையான  உயிரினங்களும் ஓம் என்ற பேரொளியை எழுப்பி தன் தவப்பயனை எட்டியுள்ளதற்கு பல சான்றுகள் நம் புராணங்களில் உள்ளது. இந்த ஓம் என்ற சொல் இந்து மதத்திற்கானது மட்டுமல்ல மனிதருக்கானது. 
 
ஓம் எனும் உச்சரிப்பு தனித்துவமானது. இதற்கு ‘பரம்பொருளே’ ஜீவனாகிய என்னை உன்னோடு இனைத்துக்கொள்’ என்று பொருள். ஆகையினாலே  நாம்  கடவுள்  பெயரை உச்சரிக்கும் முன் ஓம் சக்தி, ஓம் நமசிவாய, ஓம் முருகா, ஓம் குருநாதா, ஓம் நமோ நாராயணா, என்று அழைக்கிறோம். 
 
இந்தப் பிரபஞ்சமே ஓம் எனும் அச்சாணியில் தான் சுழல்கிறது. ஆகவே ஓம் என்று சொல்லும்போதெல்லாம் ஐம்பூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, மற்றும் காந்த சக்தியை  உருவாக்குகிறது.  
 
யோகாவில் ஓம் ஒலி:
 
ஓம் என்ற சொல்லை அ+உ+ம் என்று உச்சரிக்கின்றோம். அஅஅ என்று உச்சரிக்கையில் நம் வயிற்று மற்றும் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் ஒருவிதமான அதிர்வு உண்டாகிறது. ‘ம்ம்ம்’ என்று சொல்லும் போது மூக்கு, தலை, மற்றும் மூளை பகுதியிலும் அதிர்வு ஏற்படுகின்றது.

இறுதியாக அ+உ+ம் மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கையில் நம் மூக்கு, தொண்டை, வயிறு, மற்றும் மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஓம் என்ற ஒலியினால் உருவாகும் சக்தி இவ்விடங்களை எப்போதும் புதுப்பித்து  பாதுகாக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்