ருத்ர முத்திரை செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும்...?
யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம் என்றே சொல்லலாம்.
செய்முறை:
விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். மூச்சை வெளியிடும்போது நமது உடல், மனதிலுள்ள அழுத்தம், டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.