மகா வில்வம் பற்றிய சிறப்பு தகவல்கள் !!

Webdunia
வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
 
மகா வில்வம்: தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று. ஒரு முறை "மகா வில்வம்" பிரதஷினம் செய்தால், கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும்.

மகா வில்வம் வித்தியாசமானது. 5, 7, 9, 11, 12 இதழ்கள் கொண்டதாக விளங்குகிறது. வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை. 
 
இதில் மஹாவில்வத்தை கோவில், ஆசிரமம், ஜீவசமாதி போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டில், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது.
 
மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு, ஒன்பது, பனிரெண்டாக இருக்கும். மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது. பன்மடங்காய் பலன்தருவது. புண்ணியத்தை மழையாகப் பொழிவது. அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும்.
 
மகா வில்வதளங்களை அதிகமாகப் பறித்தல் கூடாது. இதனால் புண்ணிய மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூசனைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்