துவாதசி அன்று விரதம் முடிந்து உண்ணும் உணவில் 21 வகையான காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். குறைந்தபட்சம் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியனவற் றைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மசாலா, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
துவாதசி அன்று சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற நைவேத்தியங்கள் படைத்து, தேங்காய் , வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், வைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த விதமான பலன்களுக்காக பூஜை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி பூஜைகளைச் செய்து,வழிபட வேண்டும். பூஜையின் முடிவில், ஆரத்தி எடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.
இந்நாளில் மங்கலப் பொருள்களை தானமளிப்பது இரட்டிப்பு பலன்களை அளிக்கும். எந்த தானம் அளித்தாலும் அதோடு துளசியை வைத்துக் கொடுப்பது வழக்கம்.மாங்கல்ய பலம் பெறவும், விரும்பிய வரன் அமையவும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்ல பலன் அளிக்கும். இந்நாளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுவது வழக்கம்.