எந்த நாளில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜையை செய்யலாம்...?

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (17:33 IST)
பழங்காலத்தில் சூரியனையே மும்மூர்த்திகளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர். ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து செய்யக்கூடிய ஒரு பூஜை இந்த சத்ய நாராயண விரத பூஜையாகும்.


இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பூஜையை புரோகிதர் வைத்து செய்வது கை மேல் பலன் கிடைக்கும். வசதியற்றவர்கள் ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம்.

இந்த பூஜையை பௌர்ணமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம்.

பொதுவாக பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதால் பௌர்ணமியில் அனுஷ்டிக்கபடுகிறது. ஸ்ரீ சத்ய நாராயண பூஜையை செய்பவர்கள் விஷ்ணு பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள்.  ஏழ்மை விலகி செல்வம் சேரும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்