ஏகாதசி விரத முறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:26 IST)
விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.


எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்