சினிமா - 2017 ஒரு பார்வை; பொங்கல் ரிலீஸில் பைரவா

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:09 IST)
பொங்கலுக்கு சரவெடியாய் பைரவா களம் இறங்கியது. இளைய தளபதி ஏற்கனவே தெறி வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த, அவர்கள் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ரிலீஸானது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா  வெளியானது. 
விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சதீஸ், ஜெகபதி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்திருந்தார்.
விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படமும்  திரையரங்குகளில் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் நடுவில் சென்னையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை பெரிதாக  பைரவா வசூலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. 5வது வாரத்தில் இருக்கும் பைரவா சென்னையில் ரூ. 6.98 கோடி வரை  வசூலித்திருக்கும் என்றும் பைரவா ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. பின்னர் திரையிட்ட நான்கு  நாட்களில் 100 கோடி வசூலை தாண்டிய வெற்றி படம் - பைரவா என்று விஜயா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்திருந்தது.
 
பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக பாக்ஸ் ஆபிஸில் பரிதாபமாக விழித்தது, 14 -ஆம் தேதி வெளியான இந்தப் படம், முதலிரண்டு தினங்களில் 5.60 லட்சங்களை மட்டுமே வசூலித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்