போர்க்களத்தில்தான் கீதை பிறந்தது - சுவாமி விவேகானந்தர்

Webdunia
நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே. உடலில் வலுவில்லையே.. உதவி செய்ய நண்பர்கள் இல்லையே... என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.

எதற்கும்  பயப்படாதே... தயங்காதே...! இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும் பாதை  தெளிவாகும் நோக்கத்தை அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது.
 
போராடு... போராடு... போராட்டத்தில்தான் ஞானம் பிறக்கும். போர்க்களத்தில்தான் கீதை பிறந்தது.
 
வேலையில் ஈடுபடுங்கள். அப்பாது உங்களால் தாங்கமுடியாத மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள். பிறருக்காகச் செய்யப் படுகிற சிறு வேலை கூட நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்ப வல்லது. பிறர் நலத்தைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது.
 
தானசீவம் மிக்க இந்த நாட்டின் முதல் தானமான ஆன்மிக ஞானத்தை அளிப்பதை முதலில் மேற்கொள்ள வேண்டும். அந்த  தானம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிவிடக் கூடாது. அது உலகம் முழுவதும் பரவ வேண்டும்.
 
நீ பற்றற்றிரு; மற்றவை சேவை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத்  தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது. 
 
-சுவாமி விவேகானந்தர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்