என் மகனே! மரணம் நேருவதைத் தடுக்க முடியாது. கற்களைப் போலவும், கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? அதிலும் மற்றவர்களுக்கு செயவதற்காக அழிந்து போவது மிகவும் நல்லது.
* நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
* நூல்களைக் கற்கலாம், சொற்பொழிவுகளைக் கேட்கலாம், பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம், ஆனாலும் அனுபவமே சிறந்த ஆசான். அதுவே உண்மையான கல்வி.